Hanuman : சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • January 12, 2024 / 11:56 AM IST

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தேஜா சஜ்ஜா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஹனுமான்’. இப்படம் இன்று (ஜனவரி 12-ஆம் தேதி) பொங்கல் (சங்கராந்தி) பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சைனீஸ், ஜப்பனீஸ் என 10 மொழிகளில் ரிலீஸாகியுள்ளது.

சூப்பர் ஹீரோ படமான இதனை பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் அம்ரிதா அய்யர், வரலக்ஷ்மி சரத்குமார், வினய், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ‘ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus