5 மொழிகளில் உருவாகும் சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த டீசர்!

  • November 21, 2022 / 05:51 PM IST

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தேஜா சஜ்ஜா. இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘ஹனுமான்’. சூப்பர் ஹீரோ படமான இதனை பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கி வருகிறார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் அம்ரிதா அய்யர், வரலக்ஷ்மி சரத்குமார், வினய், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ‘ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது, இப்படத்தின் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது.

படத்தை தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். மிக விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus