லாபம் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

  • September 23, 2022 / 11:13 PM IST

2021 ஆம் ஆண்டு வெளியான அதிரடி நாடகத் திரைப்படம் லாபம் . எஸ்.பி. ஜனநாதன் எழுதி இயக்கி இருந்தார் இந்த படத்தை . இதில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, சாய் தன்ஷிகா மற்றும் கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்

ராம்ஜி ஒளிப்பதிவு செய்து இருந்தார் . டி. இமான் இசையமைத்து இருந்தார் . லாபம் படத்தின் முதன்மை புகைப்படம் எடுத்தல் 22 ஏப்ரல் 2019 அன்று தொடங்கியது.இந்தத் திரைப்படம் 9 செப்டம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை தழுவியது .

இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டு இருந்தபொழுது இயக்குநராக ஜனநாதன் உடல்நலக்குறைவால் காலமானார் . அவர் இறந்த பின்னரே லாபம் படம் திரைக்கு வந்தது .

பக்கிரி (விஜய் சேதுபதி) நாடு கடத்தலுக்கு பிறகு தனது சொந்த இடத்திற்குத் திரும்புகிறார், உடனடியாக கிராமத் தலைவர் வணங்காமுடி (ஜெகபதி பாபு) சந்திக்கிறார். உள்ளூர்வாசிகளின் ஆதரவுடன், அவர் கிராமத்தின் தலைவர் ஆகிறார் அதன் பின் நடக்கும் சுவாரசிய சம்பவங்கள் தான் படத்தின் கதை .

இந்நிலையில் லாபம் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமத்தை 1 கோடிக்கு படக்குழு விற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus