ஒரே படத்தில் தெலுங்கு திரை உலகத்தை திரும்பி பார்க்க வைத்த தமிழ் இயக்குனர் !

  • November 29, 2022 / 10:54 PM IST

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் . இவர் இயக்கிய கோமாளி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ஜெயம் ரவி , காஜல் அகர்வால் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார் .

கோமாளி படத்திற்கு பிறகு இவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே . இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனே நாயகனாக நடித்து இருக்கிறார் . மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது . சத்யராஜ் , ராதிகா உள்ளிட்டோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் லவ் டுடே படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டுள்ளார் . இந்த படம் தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மூன்றே நாளில் 7 கோடி வரை வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது . எனவே, பிரதீப்பை இயக்குனராக வைத்து தமிழ், தெலுங்கில் படங்களைத் தயாரிக்க சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus