அடேங்கப்பா… தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

  • August 22, 2023 / 11:43 AM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது ரசிகர்கள் இவரை ‘சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேஷ் பாபு, ஹீரோவாக அவதாரம் எடுத்த படம் ‘ராஜகுமாருடு’.

இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு மகேஷ் பாபுவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு படங்கள் குவிந்தது. மகேஷ் பாபு தமிழிலும் ‘ஸ்பைடர்’ என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழில் டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

மகேஷ் பாபு நடிகை நம்ரதா ஷிரோத்கரை 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இப்போது மகேஷ் பாபு ‘குண்டூர் காரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்தை பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி வருகிறார். படம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு ரூ.256 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus