முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.
ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. விரைவில் ‘வலிமை’யின் புதிய ஷெடியூல் ஷூட்டிங் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், அஜித்தின்
இந்த படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்க உள்ளாராம். இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். சுதா கொங்கரா சூர்யாவை வைத்து இயக்கியிருக்கும் ‘சூரரைப் போற்று’ வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகப்போகிறது. இந்த ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் தான் அஜித்தை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார் சுதா கொங்கரா. மேலும், இது நடிகர் ‘தளபதி’ விஜய்-க்கு சொல்லி அவர் நடிக்க முடியாமல் போன படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது. அஜித்திற்கு சுதா கொங்கரா சொன்ன கதை மிகவும் பிடித்து விட்டதாம். இருப்பினும் விஜய்-க்காக பண்ண கதை என்பதால் தனக்காக சில மாற்றங்களை மட்டும் செய்து கொள்ளுங்கள் என்று இயக்குநரிடம் அஜித் கூறியிருக்கிறார்.