ஹைதராபாத்தில் சைக்கிளிங் சென்ற ‘தல’ அஜித்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ் & வீடியோ!

  • February 25, 2021 / 01:42 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸை அதிக விலைக்கு ‘சோனி மியூசிக்’ நிறுவனம் வாங்கியது. இந்நிலையில், அஜித் ஹைதராபாத்தில் சைக்கிளிங் சென்றபோது எடுக்கப்பட்ட சில ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

1

2

3

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus