‘வலிமை’ மோஷன் போஸ்டர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்… கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

  • July 1, 2021 / 11:51 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம்.

Thala Ajith's Valimai Motion Poster Release Plan1

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற ஜூலை 15-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தண்டோரா போடப்பட்டது. தற்போது, இதே தேதியில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் மோஷன் போஸ்டரையும் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus