தல தலனு உயிரை விட்டுடான் !

  • January 12, 2023 / 05:41 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் துணிவு படம் ஜனவரி 11 நள்ளிரவு 1 மணிக்கு வெளியானது . சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது அந்த திரையரங்கு வழியாக வந்த லாரியின் மீது சில ரசிகர் ஏறி நடனமாடி உள்ளனர் . அப்போது பரத்குமார் என்கிற ரசிகர் தவறி லாரியில் இருந்து கீழே விழுந்துள்ளார் இதனால் அவருக்கு முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு உள்ளது பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . 19- வயதான பரத்குமார் சிந்தாதரி பேட்டையை சேர்ந்தவர் ஆவார் .

இந்நிலையில் இவரது மரணம் அவரது வீட்டில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது . பரத் தான் அவரது வீட்டை பார்த்துக் கொண்டார் என்றும் இப்போது அவரது வீட்டை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை என்று அவரது நண்பர் வருத்தப்பட்டு கூறியுள்ளார் . மேலும் தல தலவென்று உயிரை விட்டான் என்று மனம் வருந்தி பேசியுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus