தலைக்கூத்தல் படம் விமர்சனம் !

  • February 2, 2023 / 08:26 PM IST

ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கண்ணன் நாராயணன் இசையில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி உள்ள படம் தலைக்கூத்தல்.

தனியார் செக்யூரிட்டி நிறுவன ஊழியர் சமுத்திரக்கனி. அவருடைய மனைவி வசுந்தரா. இந்த தம்பதிக்கு ஒரு மகள். இவர்களுடன் மரண படுக்கையில் சமுத்திரக்கனியின் வயதான அப்பாவும் இருக்கிறார். இவர்களை சுற்றி படத்தின் கதை அமைத்து உள்ளது .

வீட்டில் இருக்கும் முதியவரை எல்லோரும் பாரமாக நினைக்கிறார்கள். ஆனால் தந்தையை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார் சமுத்திரகனி. அந்த கிராமத்தில் வயதானவர்களை தலைக்கூத்தல் முறையில், முதியவர்களை கொலை செய்யும் முறை இருக்கிறது. அதுபோல் சமுத்திரகனியின் தந்தையையும் கொல்ல மனைவி வசுந்தரா மற்றும் அவருடைய குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள். ஆனால் சமுத்திரக்கனி மறுக்கிறார். மனைவிக்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தந்தைக்காக செலவு செய்கிறார். சமுத்திரக்கனிக்கு கடன் கொடுத்தவர் வீட்டை விற்று பணத்தை எடுத்துக்கொள்ள திட்டமிடுகிறார். இதன் பின் நடப்பதே படத்தின் மீதி கதை .

சமுத்திரக்கனி எப்பொழுதும் போல தனது நடிப்பால் கவர்கிறார் . அந்த கதாபாத்திரமாகவே மாறி உள்ளார் .
ஒரு குடும்பத் தலைவனாக மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் . நடிகை வசுந்தரா யதார்த்தமான நடித்து உள்ளார் . கணவனை அவசரப்பட்டு அடிப்பதும் பிறகு கையை பிசைந்து நிற்பதும் கணவனின் அடிக்கு பயந்து ஓடுவது.. என தன் பங்கிற்கு அசத்தி உள்ளார் வசுந்தரா. பிளாஷ்பேக்கில் வரும் கதிர் கெட்டப், ஹேர் ஸ்டைல், நடிப்பு என எல்லா விதத்திலும் ரசிகர்கள் கவர்ந்து உள்ளார் . படம் முழுக்க படுத்துக்கொண்டே மனதை உருக்குகிறார் கலைச் செல்வன்.

தனது இனிமையான இசையின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார் கண்ணன் நாராயணன். . மிக அழுத்தமான படத்தை தமிழ் சினிமாவிற்கு தந்து உள்ளார் இயக்குநர் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். மொத்தத்தில் ஒரு தரமான படமாக தலைக்கூத்தல் வென்று உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus