செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸாகும் ‘தலைவி’… ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா மரியாதை!
September 4, 2021 / 02:07 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.
இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும், மதுபாலா, சமுத்திரக்கனி, அரவிந்த் சாமி, நாசர் நடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி கங்கனா ரனாவத்தின் பர்த்டே ஸ்பெஷலாக படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர்.
இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. சமீபத்தில், இந்த படத்தின் தமிழ் வெர்ஷனை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு’ சர்டிஃபிகேட் அளித்தனர். படத்தை வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று சென்னை வந்த நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
1
2
3
4
#KanganaRanaut who plays in and as #Thalaivii J.Jayalalitha visited the Memorials of Late CMs Selvi .J.Jayalalitha , M.G.R , Kalaignar Karunanidhi & Paid her respects ! #ThalaiviiIn6Days
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.