விஜய்யின் தளபதி 65 படம் துப்பாக்கி பாகம் 2 இல்லையாம்…!

  • May 8, 2020 / 11:09 AM IST

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், துப்பாக்கி 2 படம் உருவாகப் போவதாக தான் எந்தவொரு சிக்னலையும் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

பிகில் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன் விஜய் துப்பாக்கி 2 படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் திடீரென சுதா கொங்கரா படத்தில் விஜய் நடிக்கப்போவதாகவும், பேசப்பட்டது. மீண்டும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப் போவதாகவும், துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல்கள் வெளியாகின.

தளபதி ரசிகர் ஒருவர் துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம், ஐ எம் வெயிட்டிங் என பதிவு போட்டு, துப்பாக்கி 2 படம் தான் என்பதை ரிவீல் செய்ததற்கு நன்றி என ட்வீட் போட, உடனடியாக சந்தோஷ் சிவன் பதறிப்போய், நான் மற்ற படங்களை வைத்தும் கமெண்ட் போட்டுத் தான் வருகிறேன். நான் எந்தவொரு க்ளூவும் கொடுக்கவில்லை என மறுத்துள்ளார்.

இதனால் சந்தோஷ் சிவன் இப்படி பதறிப்போய் பல்டி அடித்துள்ள நிலையில், அந்த கமெண்ட்டுக்கு கீழே ரசிகர்கள், அப்படியென்றால் துப்பாக்கி 2 அல்ல இது வேறு கதை என்பதை பதிவு செய்றீங்க அப்படித்தானே என பதிலுக்கு கமெண்ட் செய்து அவரை வம்பில் மாட்டி விட்டு இருக்கின்றனர். தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று உண்மை வெளியாகிவிடும் என கருதப்படுகிறது. இதுவரை தெரிந்த 2 அப்டேட் ஒன்று தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ், இசையமைப்பாளர் தமன் என்பது மட்டும்தான்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus