தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து பேசிய ‘தளபதி’ விஜய்… வைரலாகும் வீடியோ!

  • May 18, 2022 / 09:43 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்திருந்தது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார்.

 

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கு தமன் இசையமைக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று விஜய்யும், இயக்குநர் வம்சியும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus