கசிந்தது தளபதி 66 படத்தின் புகைப்படம்

  • June 9, 2022 / 06:06 PM IST

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது . இந்த படத்தின் கதை வலுவாக இருக்கிறது என்று சமீபத்தில் நடிகர் சரத்குமார் தெரிவித்து இருந்தார் .

இசையமைப்பாளர் தமன் முதன் முதலாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் . பொதுவாக நடிகர் விஜய் நடிக்கும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் எனவே தமன் இசை மீது அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் .

இந்நிலையில் தளபதி 66 படத்தின் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு தனியார் ரிசர்ட்டில் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தளபதி 66 படத்தின் போட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது. இதிலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus