பாதியில் நின்ற தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு!

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது .

இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது கட்டப் படபிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த பொது மக்கள்
செல்போன்களில் படமெடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக உடனடியாக அந்த பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. வேறு பகுதியில் தற்போது குடிசை செட் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் இந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கபட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் வெளி நபர்கள் யாரும் படப்பிடிப்பு தளத்துக்கு ள் நுழையாமல் இருக்க பாதுகாப்பை பலப்படுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share.