நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கமல்,சூர்யா , விஜய் சேதுபதி ,ஃ பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது . உலகம் முழுக்க இந்த படம் மிகப் பெரிய வசூல் வேட்டை நடத்தி உள்ளது .
இதனிடையே விக்ரம் படத்தின் ஓ.டி.டி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கி இருந்தது . கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று பெற்றது . .திரையரங்கில் படத்தை பார்க்காத இயலாத சினிமா நட்சத்திரங்கள் ஓ.டி.டியில் படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை பாராட்டி வந்தனர் .
இந்திய சினிமாவே விக்ரம் படத்தை வெகுவாக ரசித்தது என்று சொல்லலாம் . இந்நிலையில் விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் பெரிய விழா ஒன்றிக்கு ராஜ்கமல் நிறுவனம் ஏற்பாடு செய்து உள்ளது . நவம்பர் 7-ஆம் தேதி இந்த விழா சென்னையில் நடைபெற உள்ளது . இந்த விழாவில் பட விநியோகஸ்தர்கள் , பத்திரிக்கையாளர்கள் , நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ள போகிறார்கள் .
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த விழாவில் நிச்சயம் பங்கேற்பார் என்று நம்பப்படுகிறது மேலும் இந்த விழாவில் தளபதி 67 படத்திற்கான அறிவிப்பு வருமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது .