தளபதி 67-ல் யார் யார் பணியாற்றுகிறார்கள் ?

  • January 31, 2023 / 06:00 PM IST

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் சில வாரங்களுக்கு முன் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்கு முன் நடந்தது . நேற்று ( 30.01.2023 ) படத்தின் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியானது . இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

தற்போது இந்த கட்டுரையில் தளபதி 67 படத்தின் படக்குழு பற்றின முழு தகவலை காண்போம் .

இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார் . லோகேஷ் இயக்கும் இந்த படத்தை 7 ஸ்க்ரீன் எஸ்.எஸ். லலித்குமாருடன் இணைந்து ஜெகதீஷ் பழனிசாமி இந்த படத்தை தயாரிக்கிறார் . பீஸ்ட் படத்தை ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் .

லோகேஷ் படங்களுக்கு தொடர்ந்து படத்தொகுப்பு செய்து வரும் பிலோமின் ராஜ் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார் . கலை இயக்குநராக சதீஷ் , நடன இயக்குநராக தினேஷ் , சண்டை இயக்குநர்களாக அன்பறிவு ஆகியோர் பணியாற்ற உள்ளனர் .

படத்தின் வசனத்தை இயக்குநர் லோகேஷுடன் இணைந்து ரத்னா குமார் , மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் எழுதி உள்ளனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus