அஜித்துக்கு பதிலாக நடித்த விஜய்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?
March 22, 2023 / 07:47 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.
அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் ஷூட்டிங் மிக விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது.
இந்நிலையில், அஜித் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2003-யில் ரிலீஸான தமிழ் படம் ‘திருமலை’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ரமணா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். அப்போது ரமணா இப்படத்தில் நடிக்க அஜித்தை அணுகினாராம். ஆனால், சில காரணங்களால் அஜித்தால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus