‘சூப்பர் ஸ்டார்’ தான் இயக்குநரின் முதல் சாய்ஸாம்… ரஜினி நடிக்கவிருந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்த விஜய்!

  • March 23, 2023 / 08:40 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இப்போது இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’ மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இவ்விரண்டு படங்களின் ஷூட்டிங்கும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ரஜினி நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

2002-யில் ரிலீஸான தமிழ் படம் ‘பகவதி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.வெங்கடேஷ் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். ஆனால், வெங்கடேஷின் முதல் சாய்ஸாக இருந்தது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தானாம். பின், சில காரணங்களால் ரஜினியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus