தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.
‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறதாம். இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், விஜய்யிடம் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் சொன்ன ஒரு ஒன் லைன் ஐடியா அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
பொலிட்டிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்துக்கான அடுத்த கட்ட பணிகள் ஷங்கரின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸுக்கு பிறகு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, விஜய் – ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘நண்பன்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.