ஏ.எல்.விஜய்யின் ‘தலைவா’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • July 12, 2023 / 02:56 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.

‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இதற்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறதாம். இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தலைவா’. இந்த படத்தினை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். இதில் விஜய்-க்கு ஜோடியாக அமலா பால் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், பொன்வண்ணன், மனோபாலா, சந்தானம், அபிமன்யு சிங், உதயா மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்துக்காக நடிகர் விஜய் ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus