சூப்பர் ஹிட்டான விக்ரமனின் ‘பூவே உனக்காக’… இதில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

  • March 22, 2023 / 01:40 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘வாரிசு’-வை வம்சி இயக்கியிருந்தார். இந்த ஆண்டு (2022) ஜனவரி 11-ஆம் தேதி இப்படம் ரிலீஸானது.

‘வாரிசு’-வை தொடர்ந்து விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

‘லியோ’வை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இயக்கவிருக்கிறார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பூவே உனக்காக’. இந்த படத்தினை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரமன் இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் சார்லி, சங்கீதா, அஞ்சு அரவிந்த், நம்பியார், நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். 1996-ஆம் ஆண்டு வெளி வந்த இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் விஜய் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus