இயக்குநராக அறிமுகமாகும் ‘தளபதி’ விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
August 28, 2023 / 06:12 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்-யின் 67-வது படமான ‘லியோ’வை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறதாம். இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார் என தகவல் கிடைத்துள்ளது.
இவர் இயக்கப்போகும் முதல் படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கவுள்ளாராம். மிக விரைவில் இப்படத்தில் நடிக்கப்போகும் நடிகர்களின் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.