தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான விஜய் நடித்து வெளிவரவிருக்கும் அடுத்த படம் “மாஸ்டர்” . இந்தப் படம் லாக்டோன் முடிந்ததும் வெளியிடப்படும் என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து “தளபதி 65” என்று ரசிகர்களால் அழைக்கப்படும், அவரின் அடுத்த படத்தை பற்றிய முழுமையான தகவல் வெளியிடப்படவுள்ளதாக திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.
நடிகர் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் “மாஸ்டர் “திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையில் எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் தயாரிப்பில் இந்த படம் வெளிவரவுள்ளது. மேலும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியிடப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படம் “தளபதி65”. இந்தப் படத்தைப் பற்றிய செய்திகள் அவ்வப்போது இணையதளங்களில் வந்த வண்ணம் உள்ளன.
“இந்தப்படத்தை ஏ .ஆர் .முருகதாஸ் இயக்குவாரா?” , “இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பாரா? “, “நடிகை மடோனா செபாஸ்டின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு செய்தி வந்தது. அவர்தான் கதாநாயகியா!?” , போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக வருகிற ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளான்று “தளபதி 65” திரைப்படத்தைப் பற்றிய முழுமையான தகவலை வெளியிட திரைப்பட குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தளபதி விஜய்யின் ரசிகர்கள் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.