விஜய்யின் ‘வாரிசு’ FDFS… தியேட்டரில் கண்ணீர் விட்டு அழுத இசையமைப்பாளர் தமன்!

  • January 11, 2023 / 12:40 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தளபதி’ விஜய். இவர் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘வாரிசு’ படம் இன்று (ஜனவரி 11-ஆம் தேதி) திரையரங்குகளில் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகியுள்ளது.

இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இன்று காலை சென்னையில் உள்ள ரோகினி தியேட்டரில் ரசிகர்களுடன் ‘வாரிசு’ FDFS பார்க்க இயக்குநர் வம்சி, இசையமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகர் ஷாம் ஆகியோர் சென்றுள்ளனர். படம் முடிந்ததும் ஆடியன்ஸின் வரவேற்பை பார்த்த தமன் எமோஷனலாகி கண்ணீர் விட்டு அழுததாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus