உற்சாகத்தில் தமன் போட்ட ட்வீட் ! ரஞ்சிதமே பாட்டுல விஜய் பின்னி பெடல் ….

  • November 8, 2022 / 10:23 PM IST

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு படத்தின் பூஜை சென்னையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது .

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது ஆனால் தீபாவளி தினத்தில் வெளியாகவில்லை . இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருந்தனர் . ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வாரிசு படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது .

இது ஒரு பக்கம் இருக்க இசையமைப்பாளர் தமன் தற்போது ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில் ரஞ்சிதமே பாடலின் முழு வீடியோ தொகுப்பை இப்போது தான் பார்த்தேன் என்றும் திரையரங்கில் யாரும் உட்காரமாட்டீங்க டாட் என்றும் பின்னி பெடல் என்று உற்சாகத்துடன் ட்வீட் செய்துள்ளார் . இந்த ட்வீட் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus