தெறி ரீமேக்கில் நடிக்க போகும் நடிகர் !

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2015-ஆம் வெளியான படம் தெறி. இந்த படத்தை இயக்கியவர் அட்லீ.
நடிகை சமந்தா மற்றும் நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் . இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் . கலைப்புலி.எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்து இருந்தார் . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது .மேலும் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரபாஸ் நடித்த ‛சாஹோ’ படத்தை இயக்கிய சுஜித் இந்தப் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .பவன் கல்யாண் தற்போது ‛ஹரஹர வீர மல்லு, பாவதீயுடு பகத்சிங்’ மற்றும் ‛வினோதய சித்தம்’ தெலுங்கு ரீமேக் ஆகியவற்றை தன் வசம் வைத்துள்ளார். இப்போது ‛தெறி’ ரீமேக்கும் அவரது படங்களின் வரிசையில் சேர்ந்து இருக்கிறது .

Share.