மாநகரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகரா ?

  • February 7, 2023 / 10:34 AM IST

மாநகரம் , கைதி , மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது நடிகர் விஜய் , அர்ஜுன் , த்ரிஷா , கெளதம் வாசுதேவ் மேனன் , மிஷ்கின் உள்ளிட்டோரை வைத்து மல்டி ஸ்டார் படமான லியோ படத்தை இயக்கி வருகிறார் .

லோகேஷ் இயக்கிய முதல் படமான மாநகரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது . இந்த படத்திற்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்து இருந்தார் . ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் முதன்மையான பாத்திரத்தில் நடித்து இருந்தனர் .

இந்நிலையில் சந்தீப் கிஷன் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் வைபவ் தான் நடிக்க இருந்தார் . பிறகு மாநகரம் படத்தை தெலுங்கிலும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட முடிவு செய்து உள்ளது இதனால் தெலுங்கிலும் மார்க்கெட் உள்ள சந்தீப் கிஷனை வைபவ்விற்கு பதில் நடிக்க வைத்துள்ளனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus