மீண்டும் கேப்டன் பதவிக்கு வந்த போட்டியாளர் !

  • December 5, 2022 / 02:06 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் இந்த வார கேப்டன் பதவிக்கு ஷிவின் , தனலட்சமி , மணிகண்டன் ஆகியோர் போட்டி போட்டனர் . கடுமையாக நடந்த இந்த போட்டியில் போட்டியாளர் மணிகண்டன் மூன்றாவது முறையாக கேப்டன் ஆகி உள்ளார் . அடுத்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் மணிகண்டன் மூன்றாவது முறையாக கேப்டன் ஆகி இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து உள்ளார்

இது ஒரு புறம் இருக்க இந்த வார நாமினேஷனில் வழக்கம் போல் அஸிமை மற்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்து உள்ளனர் . மேலும் மற்றொரு போட்டியாளரான ஆயிஷாவையும் பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேட் செய்து உள்ளனர் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus