சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா !

  • September 17, 2022 / 12:20 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார் . S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

டான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த படம் மே மாதம் 13-ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கினார் சிவகார்த்திகேயன் . இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக முடிந்துவிட்டது .

இந்நிலையில் இந்த படத்திற்கு ப்ரின்ஸ் என தலைப்பு வைத்து இருந்தார்கள். இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு மொழி கற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது .’பிரின்ஸ்’ படத்திற்காக முதல் முறையாக தெலுங்கில் டப்பிங் பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது .

இது ஒரு பக்கம் இருக்க பிரின்ஸ் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை 42 கோடிக்கு ஸ்டார் விஜய் நிறுவனமும் , டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus