முன்னணி ஹீரோக்களின் மனதில் இடம் பிடித்த இயக்குநர் !

  • November 26, 2022 / 12:16 AM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படங்கள் மாறன் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் . இந்த மூன்று படங்களில் திருச்சிற்றம்பலம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் . இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி உள்ளது . அடுத்து ஆண்டு இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் தனுஷ் தற்போது நடித்து வரும் படம் கேப்டன் மில்லர் . ராக்கி , சாணி காகிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார் . பிரியங்கா மோகன் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து உள்ளது . அடுத்த கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

தற்போது கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . எச்.வினோத் தற்போது துணிவு படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார் . அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க உள்ளார் . அதன் பிறகு தனுஷ் படத்தின் வேலைகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus