“அய்யயோ! இந்த கூட்டணி போதும்டா சாமி” என்று ரசிகர்கள் புலம்பிய ஹீரோ & இயக்குனர் கூட்டணி!
இந்த கூட்டணியில் இனிமேல் படமே வேண்டாம் என்று ரசிகர் கெஞ்சும் கூட்டணி.!
தமிழ் சினிமாவில் கூட்டணியாக உருவாகும் படங்கள் ஏராளம். ஹீரோ இயக்குனர் கூட்டணி, ஹீரோ ஹீரோயின் கூட்டணி, ஹீரோ தயாரிப்பாளர் கூட்டணி என்று நிறைய கூட்டணிகளில் படங்கள் வந்துள்ளது. அதில் ஹிட்டான கூட்டணி எது, தோல்வியடைந்த கூட்டணி எது என்று பார்க்கலாம்.
ஹரி – சூர்யா:
2005 ஆம் ஆண்டு ஆறு படத்தில் முதல் முதலில் ஆரம்பித்தது ஹரி சூர்யா கூட்டணி. ஆறு படத்தின் வெற்றியை தொடர்ந்து வேல்,சிங்கம் என்று தொடர் ஹிட் அடித்தனர். ஆனால் அதன் பிறகு வந்த சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அஜித் – சிவா :
தோல்வி படங்களை குடுத்து வந்த அஜித்தை காப்பாற்றியது சிவா கூட்டணி தான். 2014 ஆம் ஆண்டு “வீரம்” படத்தில் இணைந்த அஜித் சிவா கூட்டணி, வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து “வேதாளம்” படத்தில் மீண்டும் இணைந்தனர். அதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் சிவா கூட்டணியில் “விவேகம்” படத்தின் அறிவிப்பு வந்தது. ரசிகர் பெரும் எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்க சென்றனர்.ஆனால் படம் பெரும் ஏமாற்றத்தை தன குடுத்தது. விவேகம் படத்தின் “விசுவாசம்” திரைப்படத்தில் மீண்டும் இணைந்தது சிவா அஜித் கூட்டணி. ரசிகர்கள் இத்துடன் இந்த கூட்டணி போதும் என்று புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
விக்ரம் – ஹரி:
சாமி திரைப்படத்தில் இணைந்த விக்ரம் கூட்டணி சாமியின் மெகா ஹிட்டை தொடர்ந்து “அருள்” படத்தின் இணைந்தனர். ஆனால் அருள் படம் தோல்வியை அடைந்தது. மீண்டும் சாமி 2-இல் இணைந்தனர். அந்த படமும் பெரும் தோல்வியையே தழுவியது.
விஜய் – தரணி :
தமிழ் சினிமாவின் முதல் 50 கோடி திரைப்படம் கில்லி. தரணி விஜயின் கூட்டணியில் உருவான கில்லி திரைப்படம் இன்றளவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. கில்லியின் வெற்றியை தொடர்ந்து “குருவி” திரைப்படத்தில் மீண்டும் இணைந்தது இந்த கூட்டணி. அனால் குருவி திரைப்படம் எதிர்பாத்த அளவு மக்களிடம் சென்றடையவில்லை. தோல்வியையே அடைந்தது.
(தொடரும்…)