ஆத்திசூடி சொல்ல சொன்னா … என்ன சொல்றாரு …பாருங்க!!

  • December 15, 2022 / 01:14 AM IST

ஆத்திசூடி சொல்ல சொன்னா … என்ன சொல்றாரு …!!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 60 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு மைனா, ரட்சிதா , அமுதவாணன் போட்டி போட்டனர் . போட்டியில் மைனா வென்று பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது முறையாக கேப்டன் ஆகி உள்ளார் . இதனால் இந்த வார நாமினேஷனில் அவர் பெயர் இடம்பெறவில்லை .

இது ஒரு பக்கம் இருக்க இந்த நாமினேஷன் லிஸ்டில் மணிகண்டன் , விக்ரமன் , ஜனனி , ஏ.டி.கே , அஸிம் ,ரட்சித்தா ஆகியோர் தேர்வாகி உள்ளனர் . இதனால் இந்த வாரம் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது .

மேலும் இந்த வாரம் சொர்க்கவாசி மற்றும் நரகவாசி டாஸ்க் நடந்து வருகிறது . இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் பற்றி வந்துள்ளது . அதில் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் 10 வயது மாணவருடைய அறிவுத்திறனை சமம் செய்வது போல் விளையாட வேண்டும் என்கிறார் அந்த வகையில் சில கேள்விகள் கேட்கப்படுகிறது . இந்த ப்ரோமோ முற்றிலும் நகைச்சுவையாக அமைந்துள்ளது .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus