நடிகர் தனுஷின் ‘வா வாத்தி’ பாடலை க்யூட்டாக பாடிய சிறுமி !

  • November 17, 2022 / 06:43 PM IST

கடந்த 2006ஆம் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் வெயில் . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தவர் ஜி.வி.பிரகாஷ் . இது தான் இவரது முதல் படம் . இந்த பல வெற்றி படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார் . பல நல்ல நல்ல பாடல்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார் . 2014ஆம் ஆண்டு வரை இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் 2015ஆம் ஆண்டு வெளிவந்த டார்லிங் என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் .

தற்போது தனக்கென ஒரு இடத்தை தமிழ்சினிமாவில் இவர் பிடித்துள்ளார்‌. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஐங்கரன் , செல்ஃபி, உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் . அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் வாத்தி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார் . வாத்தி படத்தின் முதல் பாடல் வா வாத்தி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது இந்த பாடலை சின்ன குழந்தை பாடி உள்ளது இதை சமூக வலைத்தளத்தில் ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்து உள்ளார் . பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர் .

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus