வலிமை படத்திற்கு கிடைத்த பெருமை !

  • November 22, 2022 / 10:24 AM IST

உலக அளவில் பிரபலமான விளையாட்டு கால்பந்து . இந்த விளையாட்டுக்கு உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது . தற்போது கால்பந்து போட்டியின் உலக கோப்பை கத்தார் நாட்டில் தொடங்கி நடந்து வருகிறது . பிரேசில் , ஜெர்மனி , ஸ்பெயின் , பிரான்ஸ் உள்ளிட்ட அணிகள் மீது எதிர்ப்பார்ப்பு உள்ளது .
மேலும் நட்சித்திர வீரர்களான ரொனால்டோ , மெஸ்ஸி உள்ளிட்டோர் மீதும் எதிர்ப்பார்ப்பு உள்ளது . இவர்கள் இருவருக்கும் இந்த உலக கோப்பை தான் கடைசி உலக கோப்பையாகும் .

இந்த ஆண்டு உலக கோப்பை போட்டியில் மேலும் நான்கு முறை உலகக்கோப்பை வென்ற இத்தாலி, உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாமல் போனது . இதனால் அந்த நாட்டு ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர் . இந்நிலையில் இத்தாலி நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் Mario balotelli . இவர் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தின் காட்சியை ஸ்டோரியாக வைத்திருக்கிறார். இதற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை .

நடிகர் அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களும் தமிழ் சினிமாவிற்கு பெருமை என்று சொல்லி Mario balotelli பதிவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus