மீண்டும் இணையும் மெகா கூட்டணி !

  • November 12, 2022 / 12:38 PM IST

80 மற்றும் 90 களில் வெற்றிகரமான நடிகராக இருந்தவர் ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் . தனது இயல்பான நடிப்பால் தனது கிராமப்புற பொழுதுபோக்குகளுக்காக பார்வையாளர்களின் இதயங்களை வென்றவர் .45 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில், அவர் நாயகனாக கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ளார் .நீண்ட இடைவேளைக்கு தற்போது “சமானியன் ” திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதன் மூலம் மீண்டும் பெரிய திரையில் நாயகனாக வருகிறார் .

இந்த படத்தில் அவருடன் ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘தம்பி கோட்டை’ மற்றும் ‘மரைந்து பார்கும் மர்மம் என்ன’ புகழ் இயக்குநர் ஆர்.ரகேஷ் இப்படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு தற்போது இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது . நடிகர் ராமராஜன் இளையராஜாவை சந்தித்து இது குறித்து பேசியதாகவும் அதற்கு இளயராஜா ஓகே சொல்லி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

ராமராஜன் மற்றும் இளையராஜா இருவரும் கடைசியாக 1999 ஆம் ஆண்டில் வெளியான ‘அண்ணா’ படத்திற்காக இணைந்து பணிபுரிந்தனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus