தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • July 22, 2022 / 08:20 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர்’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் மற்றும் ஹாலிவுட்டில் ‘தி கிரே மேன்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘தி கிரே மேன்’ (The Gray Man) படத்தை ‘அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர்கள் அந்தோணி ருஸ்ஸோ – ஜோ ருஸ்ஸோ இணைந்து இயக்கியுள்ளனர். இந்த படம் இன்று (ஜூலை 22-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸாகியுள்ளது.

இப்படத்தில் ரையன் கோஸ்லிங், க்ரிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெஸிக்கா ஹென்விக், வாக்னர் மௌரா, ஜூலியா பட்டர்ஸ், ஐஸ்வர்யா சோனார் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் மிக முக்கிய ரோலில் தனுஷ் நடித்துள்ளாராம்.

‘தி கிரே மேன்’ என்ற பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். தற்போது, இப்படத்தை ‘நெட்ஃப்ளிக்ஸ்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus