கதை சுருக்கும் : ஒரு பெண் தான் திருமணம் செய்து கொள்ளும் குடும்பத்தின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை சமாளிக்க முயற்சிக்கிறாள். இருப்பினும், சில மாதங்களாக மாமியார் வீட்டில் இல்லாததால், முடிவில்லாத வீட்டு வேலைகளில் அவள் வாழ்க்கை பரிதாபமாகிறது.
சில விஷயங்களைத் தொடாமல் விட்டுவிடுவது நல்லது என்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் அது உண்மையாக இருக்க முடியாது. உங்கள் எண்ணம் சரியாக இருக்கும்போது, நீங்கள் சந்தித்த ஒரு அசாதாரணமான கதையைச் சொல்ல விரும்பினால், உங்களைத் தடுக்க எதுவும் இல்லை. தி கிரேட் இந்தியன் கிச்சன், அதே பெயரில் மலையாளத்தில் வெற்றி பெற்ற திரைப்படத்தின் ரீமேக் படமாகும் .ஏற்கனவே சொல்லப்பட்டு இருந்தாலும் மீண்டும் சொல்லப்பட வேண்டிய கதை. ஒவ்வொரு வீட்டிலும், நம்மிடையே உள்ள ஆணாதிக்க ஆண்களை நுட்பமாக வெளிப்படுத்தும் படம் இது.
குடும்பங்களில் இருக்கும் மரபுகள் மற்றும் வழக்கமான வீட்டு வேலைகளைத் தொடர ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபத்திரம் போராடுகிறது . இந்த பிரச்சனைகளோடு அந்த வீட்டில் வாழ்வாரா இல்லை அவரது குடும்ப உறுப்பினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் கடுமையான முடிவை எடுப்பாரா? என்ற கேள்வியை படத்தில் எழுகிறது .
ராகுல் ரவீந்திரன் ஒரு ஆண் ஆதிக்க மற்றும் சுயநல மனிதராக நடித்துள்ளார், மேலும் அவர் தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். சில காட்சிகள் இயற்கையாக இல்லாத காரணத்தால் படம் சற்று செயற்கையாக இருந்தது . படத்தின் கால அளவு 95 நிமிடங்கள் மட்டுமே என்பதால், இயக்குனர் கதாபத்திரங்களின் வலிகளை பார்வையாளர்கள் உணரும் வகையில் ஓரிரு காட்சிகளைச் சேர்த்திருக்கலாம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நடிப்பால் படம் முழுவதையும் தன் வசம் கைப்பற்றுகிறார் இந்த கதாபாத்திரம் அவருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த கதாபாத்திரம் சந்தேகத்திற்கு இடமின்றி அவரது திரை வாழ்க்கையில் சிறந்த ஒன்றாகும்.
யோகி பாபுவின் கேமியோ ஒரு ஆச்சரியமான அம்சமாக இந்த படத்தில் அமைந்துள்ளது . பின்னணி இசையை விட, ஒளிப்பதிவு உண்மையில் சில பகுதிகளை வேறு நிலைக்கு உயர்த்த உதவியுள்ளது.
கிரேட் இந்தியன் கிச்சன் அதன் அசல் தன்மைக்கு உண்மையாகவே எடுக்கப்பட்டு உள்ளது , மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மீண்டும் ஒரு நல்ல படம் .