தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது லைக்கா நிறுவனம் . லைக்கா நிறுவனம் சமீபத்தில் தயாரித்த டான் , பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளது. நடிகர் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளது .
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் முன் லைக்கா நிறுவனம் புதிய படம் ஒன்றின் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது . சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகனாக நடித்து வருகின்றனர் .உள்ளனர் . இசைப்புயல் ஏ.ஆர் .ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் . மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்ற தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது .
இது ஒரு பக்கம் இருக்க தற்போது அந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியான தகவலை பகிர்ந்து உள்ளார் . அதில் ப்ரீ – ப்ரோடுச்டின் பணிகளின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளின் போது கருத்து வேறுபாட்டின் காரணமாக லால் சலாம் படத்தில் பணிபுரிய எனக்கு விருப்பமில்லை. ஆகையால் இனிமேல் வரும் போஸ்டர்களின் என்னுடைய பெயரை நீக்கி விடுங்கள்’ என்று பதிவிட்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் லைக்கா நிறுவனத்தை டேக் செய்திருக்கிறார்.
மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் பூர்ணிமா இருவரும் 30 வருடங்களுக்கு மேலாக தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது படக்குழுவிற்கு அதிர்ச்சியை தந்துள்ளது.