நடிகர் அஜித்தை சந்தித்த தருணம் !

  • December 12, 2022 / 10:20 AM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

2023 -ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறார் .

ஜிப்ரான் இசையில் ” சில்லா சில்லா ” என்கிற பாடலை அனிருத் பாடியுள்ளார் . இந்த பாடலை வைசாக் என்பவர் எழுதி உள்ளார் . சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘ காக்கா கதை ‘ பாடலை எழுதியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் ” சில்லா சில்லா ” பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் பாடலாசிரியர் வைசாக், நடிகர் அஜித் குமாரை சந்தித்த தருணத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார் . அவர் கூறியதாவது : “படப்பிடிப்பில் அஜித் சார் எனது குடும்பம் பற்றி கேட்டார். பாடலாசிரியராக எனது வளர்ச்சி பற்றி கேட்டார். முகவரி படத்தின் காட்சிகள் மனதில் வந்தது. கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். அந்த சமயம் உதவியாளர் இன்று எனது பிறந்தநாள் என அஜித் சாரிடம் கூறினார். உடனே அஜித் சார் எழுந்து நின்று கட்டிப்பிடித்து, “ஒன்னுமில்லை வைசாக், இதுக்கு அப்பறம் உங்களுக்கு எல்லாமே.. மேலே போயிட்டே இருப்பீங்க. எதுவும் கவலை படாதீங்க” என அஜித் சார் வாழ்த்தினார்.” என வைசாக் தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus