துணிவு முன் பணிந்த ஹாலிவுட் படங்கள் !

  • February 15, 2023 / 04:39 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .


துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது . இந்நிலையில் ஜனவரி 11 அன்று நள்ளிரவு 1 மணிக்கு வெளியான துணிவு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குநர் எச்.வினோத்திற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் மேலும் பேங்க் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் போன்ற புதிய கருத்துக்களை மக்களுக்கு இந்த படம் வெளிச்சம் போட்டு காமித்தது .

இந்நிலையில் துணிவு படம் நெட்பிலிக்ஸ் ஓடிடியில் பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகி இருந்தது . துணிவு படம் ஓடிடி-யில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. படம் வெளியான 24 மணி நேரத்தில் 27 நாடுகளில் ட்ரெண்ட் ஆகி டாப் 10 இடத்தை பிடித்துள்ளது.

மேலும் நெட்பிலிக்ஸ் ஓடிடியில் அந்த தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் எந்த அளவுக்கு பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது என்ற ரிப்போர்ட் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். அதன்படி கடந்த வாரம் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 திரைப்படங்களில் துணிவு மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. அதிலும் அந்த பத்து படங்களில் துணிவு மட்டும்தான் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற அனைத்தும் ஹாலிவுட் திரைப்படங்கள் தான். அந்த வகையில் துணிவு திரைப்படம் இதுவரை 40 லட்சத்து 50 ஆயிரம் மணி நேரங்களை கடந்து இருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus