என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

  • January 28, 2023 / 08:46 AM IST

இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை . அண்ணாத்தே படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர் . இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது . அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

இந்நிலையில் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . இது ஒரு பக்கம் இருக்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் , தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் . இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அதில் ” மது , சிகரெட் , அசைவம் மூன்றையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்து . இவற்றில் இருந்து என்னை விடுவித்து அன்பால் நல்வழிபடுத்தியவர் என் மனைவி லதா தான் என்று ரஜினி பேசி உள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus