விஜய்க்கு ஏற்பட்ட புதிய பிரச்சனை !

  • November 25, 2022 / 12:06 AM IST

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது . தமன் இசையில் ரஞ்சிதமே என்கிற பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி இணைந்து பாடி இருந்தனர் . வெளியான முதல் இந்த பாடல் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தமிழ்நாட்டில் வருகிற பொங்கல் தினத்தன்று இந்த படம் வெளியாக உள்ளது .

இந்நிலையில் நடிகர் விஜய் சில தினங்களுக்கு முன் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களிடம் பேசினார் . அப்போது அவர் வந்த காரில் தடை செய்யப்பட்ட கருப்பு நிற ஸ்டிக்கரை தனது கார் கண்ணாடியில் ஒட்டி இருந்தார் இதனால் நடிகர் விஜய்க்கு விஜய்க்கு காவல் துறை 500 ரூபாய் அபராதம் விதித்தது . அந்த அபராத தொகையை நடிகர் விஜய் செலுத்திவிட்டார் .

பல் லட்சம் ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus