நாடு முழுவதும் கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் அரசு திரைப்பட படப்பிடிப்புகள் நடப்பதற்கு அனுமதி வழங்கியது. குறிப்பிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி படப்பிடிப்பு நடத்தவும், 100 பேர் கொண்ட குழுவுடன் படப்பிடிப்பு நடக்கலாம் என்றும் கூறியுள்ளது.
தற்போது மத்திய அரசு வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தற்போது இதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு, ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்கள் அமர வேண்டும் எனவும், அனைவரும் மாஸ்க் அணிந்தபடி தான் படம் பார்க்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி படம் முடிந்தவுடன் ஒவ்வொரு முறையும் கிருமி நாசினி கொண்டு தியேட்டர்களை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், விளம்பர இடைவேளை நேரங்களில் எந்த நொறுக்கு தீனிகளை விற்கவும் அனுமதி இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.
மேலும் ஏசி அளவை 24 முதல் 30 டிகிரி அளவில் வைக்கவேண்டும் என்றும், விளம்பர இடைவேளைகளில் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை திரையிட வேண்டும் என்றும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளார்கள்.