அடேங்கப்பா… ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ பட நடிகை நீத்து சந்திராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நீத்து சந்திரா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘யாவரும் நலம்’. இதனை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரம் குமார் இயக்க, ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார்.

‘யாவரும் நலம்’ படத்துக்கு பிறகு நடிகை நீத்து சந்திராவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதி பகவன், வைகை எக்ஸ்பிரஸ், பிரம்மா.COM’ என தமிழ் படங்கள் குவிந்தது.

நீத்து சந்திரா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஆங்கிலம், கன்னடம், போஜ்புரி, ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இவர் கடைசியாக நடித்த ‘Never Back Down: Revolt’ என்ற ஹாலிவுட் படம் கடந்த ஆண்டு (2021) வெளியானது. இந்நிலையில், நீத்து சந்திராவின் சொத்து மதிப்பு ரூ.7 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.