நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .
2023 -ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறார் . தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது . விரைவில் துணிவு படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகும் என்று நம்பப்படுகிறது .
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் அவர்களின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் சமூக வலைத்தளத்தில்
நடிகர் அஜித் கூறிய ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார் . அதில் ” உங்களைச் சுற்றி எதிர்மறை உணர்வுகள் இல்லாமல், உயர்ந்த இலக்குகள் மற்றும் அதிக உந்துதல் ஆகியவற்றைச் செய்யத் தூண்டுபவர்களை வைத்துக்கொள்ளுங்கள் . நல்ல நேரம் மற்றும் நேர்மறை ஆற்றல் மட்டும் போதும் . பொறாமை அல்லது வெறுப்பு தேவை இல்லை. ஒருவருக்கொருவர் முழுமையான சிறந்ததை வெளியே கொண்டு வரவேண்டும் என்றும் லவ் & லெட் லிவ் என்று பதிவிட்டுள்ளார் மேலும் unconditional love என்றும் தெரிவித்துள்ளார் .
— Suresh Chandra (@SureshChandraa) November 17, 2022