சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பிரபல காமெடி நடிகர் விவேக், பிரபல இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன் – தாமிரா என ரசிகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்குமே பிடித்தமான நபர்களின் இழப்பு அதிர்ச்சியளிக்கிறது.
இன்று காலை பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் இறந்த செய்தி பொய்யாக இருக்க கூடாதா? என்று ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வேதனையுடன் பதிவிட்டு வருகிறார்கள். இந்த சூழலில் இன்னொரு மரணச் செய்தி வந்திருக்கிறது.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘சிவாஜி’, ஆர்யாவின் ‘ராஜா ராணி’, ‘தளபதி’ விஜய்யின் ‘கத்தி, தெறி’, தனுஷின் ‘மாரி’, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ‘நட்பே துணை’ போன்ற பல படங்களில் மிக முக்கிய ரோலில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. 84 வயதான நடிகர் செல்லதுரையின் மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்று வாருங்கள் அய்யா
pic.twitter.com/VPoNDgxX0G
— Kavin (@Kavin_m_0431) April 30, 2021
Deepest condolences to #chelladurai ayya #ripchelladurai
— Amritha (@Actor_Amritha) April 30, 2021
RIP Chelladurai Ayya
pic.twitter.com/0bvmf9Qm2I
— Arulnithi tamilarasu (@arulnithitamil) April 30, 2021
#செல்லதுரை ஐயாவின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. அவர் என் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். எனது அடுத்த படத்தில் #ரஜினி சார் உடன் இணைந்து பணியாற்றுவேன் என்று சொன்னபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்
— Actor GeorgeMaryan (@GeorgeMaryanOff) April 30, 2021
How many times we have seen this man on screen and felt just like family.
how much more pain we have to go thro. pic.twitter.com/9TYbIIXWZl
— Anjana Rangan (@AnjanaVJ) April 30, 2021
Rest in peace ayya
pic.twitter.com/7oIadgwkMK
— kathir (@am_kathir) April 30, 2021