கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ சீசன் 4… இந்த 2 ஹீரோயின்ஸும் போட்டியாளர்களாமே?

  • September 7, 2020 / 05:50 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-க்கான ஷூட்டிங் வெகு விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான இரண்டு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது.

நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த இரண்டு ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ப்ரோமோ வீடியோக்களில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணமுள்ளது கோலிவுட் வட்டாரம். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் அம்ரிதா ஐயர் மற்றும் சாந்தினி தமிழரசன் ஆகியோர் கலந்து கொள்ளப்போவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இது தொடர்பாக நடிகைகள் அம்ரிதா ஐயர் மற்றும் சாந்தினி தமிழரசன் ட்விட்டரில் “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus