‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. விரைவில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-க்கான ஷூட்டிங் துவங்கவுள்ளதாம்.
இதில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் ரம்யா பாண்டியன், அதுல்யா ரவி மற்றும் சுனைனா ஆகியோர் கலந்து கொள்ளப்போவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.
இது தொடர்பாக நடிகைகள் ரம்யா பாண்டியன் மற்றும் அதுல்யா ரவி தரப்பில் விசாரித்த போது “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறினார்கள். மேலும், நடிகை சுனைனா தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டால், நான் ஏற்கனவே கமிட் செய்து வைத்திருக்கும் படங்களில் எப்படி என்னால் நடிக்க முடியும். எந்த ஒரு ரியாலிட்டி ஷோவிலும் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
I wonder who is going to finish my films if I go be a part of a reality show. 🙂
Never wanted to be a part of any reality show. Thank you.— Sunainaa (@TheSunainaa) August 17, 2020
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.