‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம். அப்படிப்பட்ட ‘வைகைப்புயல்’ வடிவேலு நடித்த காமெடி சீன்களில், பேசும் வசனத்தையும் தாண்டி நம் கவனத்தை ஈர்த்த விஷயங்களின் லிஸ்ட் இதோ…
1. அரசு – பிச்சுமணி :
சரத்குமாரின் ‘அரசு’ படத்தில் வடிவேலு ‘பிச்சுமணி’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்திருப்பார். அதில் அவருக்கு அரசாங்க வேலை கிடைத்து விட்ட பிறகு ‘டெல்லி’ கணேஷின் வீட்டு முன்பு சென்று மாஸ் காட்டுவார். இக்காட்சியில் வடிவேலு அணிந்திருக்கும் ப்ளூ கோட் சூட் நம் கவனத்தை ஈர்த்தது.
2. ப்ரண்ட்ஸ் – நேசமணி :
விஜய்யின் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலு ‘நேசமணி’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்திருப்பார். இப்படத்தில் வடிவேலு வரும் காட்சிகளில், அவர் தலையில் ஒரு ரெட் கலர் தொப்பி அணிந்திருப்பார். அது நம் கவனத்தை ஈர்த்தது.
3. வின்னர் – கைப்புள்ள :
பிரஷாந்தின் ‘வின்னர்’ படத்தில் வடிவேலு ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்திருப்பார். இப்படத்தில் வடிவேலு வரும் காட்சிகளில், அவர் முகத்தில் முறுக்கு மீசையை பென்சிலில் வரைந்திருப்பார். அது நம் கவனத்தை ஈர்த்தது.
4. போக்கிரி – பாடி சோடா :
விஜய்யின் ‘போக்கிரி’ படத்தில் வடிவேலு ‘பாடி சோடா’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்திருப்பார். இப்படத்தில் வடிவேலு வரும் காட்சிகளில், அவர் தலையில் ஒரு குங்ஃபூ கொண்டை இருக்கும். அது நம் கவனத்தை ஈர்த்தது.
5. எல்லாம் அவன் செயல் – வண்டு முருகன் :
ஆர்.கே-வின் ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் வடிவேலு ‘வண்டு முருகன்’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்திருப்பார். அதில் அவர் நீதி மன்றத்தில் வக்கீலாக வாதாடும் காட்சிகளில் கருப்பு கோட் அணிந்திருப்பார். அது நம் கவனத்தை ஈர்த்தது.
6. கண்ணாத்தாள் – சூனா பானா :
கரனின் ‘கண்ணாத்தாள்’ படத்தில் வடிவேலு ‘சூனா பானா’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்திருப்பார். இப்படத்தில் வடிவேலு வரும் காட்சிகளில், அவர் தலையில் ஒரு ரெட் கலர் துண்டை கட்டியிருப்பார். அது நம் கவனத்தை ஈர்த்தது.
7. மனதை திருடிவிட்டாய் – ஸ்டீவ் வாக் :
பிரபு தேவாவின் ‘மனதை திருடிவிட்டாய்’ படத்தில் வடிவேலு ‘ஸ்டீவ் வாக்’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்திருப்பார். இப்படத்தில் வடிவேலு வரும் காட்சிகளில், அவர் லெதர் ஜாக்கெட் அணிந்து, காதில் ஸ்டட் போட்டிருப்பார். அது நம் கவனத்தை ஈர்த்தது.
8. வெடிகுண்டு முருகேசன் – அலர்ட் ஆறுமுகம் :
பசுபதியின் ‘வெடிகுண்டு முருகேசன்’ படத்தில் வடிவேலு அலர்ட் ஆறுமுகம்’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்திருப்பார். இப்படத்தில் வடிவேலு வரும் காட்சிகளில், அவர் முன் தலையில் சுருட்டை முடி இருக்கும். அது நம் கவனத்தை ஈர்த்தது.
9. வெற்றிக் கொடி கட்டு – சுடலைமுத்து :
பார்த்திபன் – முரளி இணைந்து நடித்த ‘வெற்றிக் கொடி கட்டு’ படத்தில் வடிவேலு ‘சுடலைமுத்து’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்திருப்பார். இப்படத்தில் வடிவேலு வரும் காட்சிகளில், அவர் ஜிகுஜிகுவென மின்னும் காஸ்டியூமை அணிந்திருப்பார். அது நம் கவனத்தை ஈர்த்தது.